திரு. நீரவ் ஷா, 52, தற்போது எச் டி எஃப் சி வங்கியில் குழு தலைவர் - கார்ப்பரேட் பேங்கிங். தனது தற்போதைய பொறுப்பில், பெரிய கார்ப்பரேட்டுகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பல-தேசிய நிறுவனங்களுக்கு வங்கியின் பரந்த அளவிலான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விரிவுபடுத்துவதற்கான பொறுப்பாளராக இருக்கிறார்.
திரு. ஷா அவர்களுக்கு மொத்தம் 28 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளது, அதில் 24 ஆண்டுகள் வங்கியில் பணியாற்றியுள்ளார். திரு. ஷா அவர்கள் 1999 ஆம் ஆண்டு கார்ப்பரேட் வங்கி குழுமத்துடன் உறவு மேலாளராக வங்கியில் சேர்ந்தார், மேலும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, 2020 ஆம் ஆண்டில் தற்போதைய பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, வளர்ந்து வரும் கார்ப்பரேட் குழுமம், உள்கட்டமைப்பு நிதி குழுமம், கிராமப்புற வங்கி குழுமம் மற்றும் போக்குவரத்து நிதி போன்ற வணிகங்களுக்குத் தலைமை தாங்கினார்.
இது கார்ப்பரேட் வங்கியில் இவரது இரண்டாவது பணியாகும். 2011 ஆம் ஆண்டில் இவரது முந்தைய பதவியில், இவர் மேற்கு பிராந்தியத் தலைவராக இருந்தார், அப்போது இவர் பல கார்ப்பரேட் ரிலேஷன்ஷிப் பெறுவதற்கும் மேம்படுத்துவதற்கும் பொறுப்பாக இருந்தார்.
திரு. ஷா மும்பை பல்கலைக்கழகத்தில் வணிகத்தில் இளங்கலை பட்டம் மற்றும் நிர்வாக ஆய்வுகளில் (MMS) முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
தனது ஓய்வு நேரத்தில், உலகம் முழுவதும் பயணம் செய்வதன் மூலம் ஓய்வெடுக்க விரும்புகிறார், மேலும் விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.