நீங்கள் தகுதி பெறுவீர்கள் என்று யோசிக்கிறீர்களா?
நீங்கள் பின்வரும் அளவுகோல்களை பூர்த்தி செய்தால் எலக்ட்ரிக் கார் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்:
நீங்கள் பின்வரும் அளவுகோல்களை பூர்த்தி செய்தால் எலக்ட்ரிக் கார் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்:
விண்ணப்பதாரரின் வேலைவாய்ப்பு வகையைப் பொறுத்து எலக்ட்ரிக் வாகன கடனுக்குத் தேவையான ஆவணங்கள் மாறுபடும்.
ஊதியம் பெறும் விண்ணப்பதாரர்கள்
முகவரி மற்றும் அடையாளச் சான்று:
வருமானச் சான்று:
தனி உரிமையாளர் விண்ணப்பதாரர்கள்
கூட்டாண்மை நிறுவன பங்குதாரர் விண்ணப்பதாரர்கள்
பிரைவேட் லிமிடெட் கம்பெனி வைத்திருக்கும் விண்ணப்பதாரர்கள்
பப்ளிக் லிமிடெட் கம்பெனி டைரக்டர் விண்ணப்பதாரர்கள்
எலக்ட்ரிக் கார் கடன் குறைந்த வட்டி விகிதங்கள், சாத்தியமான வரி ஊக்கத்தொகைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துக்கான ஆதரவு போன்ற நன்மைகளை வழங்குகிறது, எலக்ட்ரிக் வாகன உரிமையை மிகவும் மலிவானதாகவும் சுற்றுச்சூழல் பொறுப்பாகவும் மாற்றுகிறது.
நீங்கள் ஆடம்பரமான எலக்ட்ரிக் கார் அல்லது பல-பயன்பாட்டு காரை விரும்பினாலும், ₹ 10 கோடி வரை நிதியுதவியுடன் ஒவ்வொரு பட்ஜெட்டிற்கும் எச் டி எஃப் சி பேங்க் கடன்களை வழங்குகிறது. இவி வாங்குவதற்கான உங்கள் தற்போதைய வாகன கடன் மீது கூடுதல் நிதிக்கு ஆவணங்கள் இல்லாமல் எளிதான டாப்-அப் கடன்களையும் நீங்கள் அனுபவிக்கலாம். மேலும், எச் டி எஃப் சி பேங்கின் எளிதான திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள் உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு 12 முதல் 96 மாதங்கள் வரை இருக்கும். அதுமட்டுமல்லாமல், முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 10 விநாடிகளில் உடனடி ஒப்புதலுடன் டிஜிட்டல் செயல்முறை சுமார் 30 நிமிடங்களில் கடன் ஒப்புதல்களை நிறைவு செய்கிறது.
நீங்கள் இவி கார் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்:
2. PayZapp
3. நெட்பேங்கிங்
4. கிளைகள்
ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை:
படிநிலை 1: கடனுக்கான உங்கள் தகுதியை சரிபார்க்கவும்
படிநிலை 2: எங்கள் ஆன்லைன் கால்குலேட்டரைப் பயன்படுத்தி உங்கள் கடன் தொகை, தவணைக்காலம் மற்றும் வட்டி விகிதத்தை தேர்வு செய்யவும்
படிநிலை 3: உங்கள் தனிப்பட்ட மற்றும் வேலைவாய்ப்பு விவரங்களுடன் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்
படிநிலை 4: தேவையான அடையாளம், முகவரி மற்றும் வருமானச் சான்று ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும்*
படிநிலை 5: துல்லியத்திற்காக உங்கள் விண்ணப்பத்தை மதிப்பாய்வு செய்து செயல்முறைக்காக அதை சமர்ப்பிக்கவும்
*சில சந்தர்ப்பங்களில், வீடியோ KYC-ஐ நிறைவு செய்வது தேவைப்படலாம்.
தற்போதுள்ள எச் டி எஃப் சி பேங்க் வாடிக்கையாளர்களுக்கான சலுகைகள்:
தற்போதுள்ள முன்-ஒப்புதலளிக்கப்பட்ட எச் டி எஃப் சி பேங்க் வாடிக்கையாளர்களுக்கு 10 விநாடிகளில் எலக்ட்ரிக் வாகன கடன்
கிடைக்ககூடிய தன்மை:
இந்த கடன் அனைத்து எலக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்களிலும் கிடைக்கிறது.
எலக்ட்ரிக் கார் கடன் என்பது உங்களுக்கு விருப்பமான எலக்ட்ரிக் காரை வாங்க மற்றும் முன்-தீர்மானிக்கப்பட்ட தவணைக்காலத்தில் சமமான மாதாந்திர தவணைகளில் (EMI) கடன் தொகையை செலுத்த உங்களை அனுமதிக்கும் ஒரு கடன் ஆகும்.
EV கடனுக்கான தவணைக்காலம் மிகவும் வசதியானது, உங்கள் தேவைகளுக்கு ஏற்ற தவணைக்காலத்தை தேர்வு செய்ய உங்களுக்கு உதவுகிறது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கான கார் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, தவணைக்காலம் 12 முதல் 96 மாதங்கள் வரை இருக்கலாம்.
எச் டி எஃப் சி பேங்கின் புதிய எலக்ட்ரிக் கார் கடனை பின்வரும் நபர்கள் பெற முடியும்:
1. 21 முதல் 60 வயது வரையிலான ஊதியம் பெறும் தனிநபர்கள் (தவணைக்காலத்தின் முடிவில்)
2. 21 முதல் 65 வயது வரையிலான சுயதொழில் புரியும் தனிநபர்கள் (தவணைக்காலத்தின் இறுதியில்)
3. பங்கு நிறுவனங்கள்
4. பப்ளிக் அண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள்
5. HUF-கள் மற்றும் அறக்கட்டளைகள்
EV கடனுக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படை ஆவணங்களில் அடையாளம் மற்றும் முகவரிச் சான்று போன்ற KYC அடங்கும். விண்ணப்பதாரரின் சுயவிவரத்தைப் பொறுத்து, எலக்ட்ரிக் கார் கடனைப் பெறும்போது வங்கி மற்றும் ஊதியம் அல்லது வருமான ஆவணங்கள் போன்ற பிற ஆவணங்களும் தேவைப்படுகின்றன.
எலக்ட்ரிக் வாகன ஃபைனான்ஸ் விருப்பங்கள் என்று வரும்போது, ஊதியம் பெறும் தனிநபர்கள் தங்கள் வருடாந்திர சம்பளத்திற்கு மூன்று மடங்கு கடன் தொகையை பெறலாம், அதே நேரத்தில் சுயதொழில் புரியும் தொழில்முறையாளர்கள் தங்கள் வருடாந்திர வருமானத்திற்கு ஆறு மடங்கு வரை கடன் பெறலாம்**.
**குறிப்பிட்ட மாடல்கள் மீதான சலுகைகள். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.
எச் டி எஃப் சி பேங்க் EV கார் கடனைப் பெறுவதற்கு, நீங்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும், மற்றும் செயல்முறையை நிறைவு செய்ய எங்கள் பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார். மாற்றாக, உங்களுக்கு அருகிலுள்ள எந்தவொரு எச் டி எஃப் சி பேங்க் கிளையையும் நீங்கள் அணுகலாம்.
ஆம், உங்கள் இவி கார் கடனுக்கான தவறவிட்ட EMI-ஐ ஆன்லைனில் செலுத்தலாம். நீங்கள் உங்கள் எச் டி எஃப் சி பேங்க் கடன் விவரங்களை வழங்க வேண்டும் மற்றும் கடன் கணக்கிற்கான பணம்செலுத்தலை உறுதிசெய்ய வேண்டும். இது முடிந்தவுடன், உங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணில் ஆன்லைன் பரிவர்த்தனை உறுதிப்படுத்தல் மற்றும் பரிவர்த்தனை குறிப்பு எண்ணை நீங்கள் பெறுவீர்கள்.
எலக்ட்ரிக் கார் கடனை இரத்து செய்தால், கடன் வழங்கப்பட்ட தேதியிலிருந்து கடன் இரத்து செய்யப்பட்ட தேதி வரை வாடிக்கையாளரால் வட்டி கட்டணங்களை ஏற்க வேண்டும். முத்திரை வரி, ஆவண கட்டணங்கள், செயல்முறை கட்டணங்கள், மதிப்பீடு மற்றும் ஆர்டிஓ கட்டணங்கள் ரீஃபண்ட் செய்யப்படாது என்பதை நினைவில் கொள்வது முக்கியமாகும். கடன் இரத்து செய்யப்பட்டால் இந்த கட்டணங்களை தள்ளுபடி செய்யவோ அல்லது ரீஃபண்ட் செய்யவோ முடியாது.
கார் கடனுடன் உங்கள் கனவு இவி காரை இன்றே ஓட்டுங்கள்!