திரு. ரவீஷ் கே. பாட்டியா அவர்கள் குழுமத் தலைவராக உள்ளார் - வளர்ந்து வரும் நிறுவனங்கள் குழு மற்றும் சுகாதார ஃபைனான்ஸ். இவரது தற்போதைய பணியில், வங்கியின் பரந்த அளவிலான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நடுத்தர சந்தைப் பிரிவு மற்றும் சுகாதாரப் பிரிவுக்கு விரிவுபடுத்துவதற்கு இவர் பொறுப்பாவார். தற்போது வகிக்கும் பதவிக்கு முன்னர், இவர் கார்ப்பரேட் பேங்கிங் குழுத் தலைவராகப் பணியாற்றினார் - நார்த் & PSU கவரேஜ்.
திரு. பாட்டியா அவர்கள் 2009 ஆம் ஆண்டு எச் டி எஃப் சி வங்கியில் சேர்ந்தார், மேலும் வங்கியில் பணியாற்றிய காலத்தில், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களில் வடக்கு ஃப்ரான்சைஸை வளர்ப்பதில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில், இவர் இந்தியாவின் நடுத்தர சந்தை வணிக வளர்ச்சிக்கு தலைமை தாங்கியுள்ளார்.
இவருக்கு மூன்று தசாப்தங்களுக்கும் மேலான பணி அனுபவம் உள்ளது. எச் டி எஃப் சி வங்கியில் சேருவதற்கு முன்பு, இவர் ABN அம்ரோ வங்கி, BNP Paribas, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி போன்ற சர்வதேச வங்கிகளுடன் பணியாற்றினார், அதே போல் SB Billimoria உடன் ஆலோசனை பணியிலும் ஈடுபட்டார்.
திரு. பாட்டியா அவர்கள் தனது MBA பட்டத்தை IIM அகமதாபாத்தில் முடித்துள்ளார். தனது ஓய்வு நேரத்தில், திரு. பாட்டியா அவர்கள் படிப்பதையும், பழைய இந்தி பாடல்களைக் கேட்பதையும், மேற்கத்திய பாரம்பரிய இசையையும், விளையாட்டுப் போட்டிகளைப் பார்ப்பதையும் விரும்புகிறார்.