திரு. ஜிம்மி டாடா அவர்கள் ஜம்நலால் பஜாஜ் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்டில் நிதி மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றவர், மேலும் இந்திய பட்டய நிதி ஆய்வாளர் நிறுவனத்தின் பட்டய நிதி ஆய்வாளர் ஆவார். திரு. டாடா அவர்கள் வங்கி மற்றும் நிதித் துறையில் 35 வருடத்திற்கும் மேல் அனுபவம் கொண்டவர்.
திரு. டாடா அவர்கள் 1987 ஆம் ஆண்டு Strategic Consultants Pvt Ltd நிறுவனத்தில் ஆலோசகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு இவர் Apple Industries Ltd நிறுவனத்தில் சேர்ந்தார். கடைசியாக மொத்த குத்தகை மற்றும் வாடகை கொள்முதல் பிரிவில் தலைவராக இருந்தார். திரு. டாடா அவர்கள் 1994 முதல் எச் டி எஃப் சி பேங்க் உடன் இணைந்தார். இவர் கார்ப்பரேட் வங்கித் துறையில் ரிலேஷன்ஷிப் மேலாளராகச் சேர்ந்தார், மேலும் பல ஆண்டுகளில் கார்ப்பரேட் வங்கித் துறையின் தலைவராகப் பதவி உயர்வு பெற்றார். ஜூன் 2013 இல் அவர் எச் டி எஃப் சி பேங்கின் தலைமை இடர் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இன்றுவரை திரு. டாடா அவர்கள் எச் டி எஃப் சி பேங்கின் தலைமை கிரெடிட் அதிகாரியாக உள்ளார்.
திரு. டாடா அவர்கள் International Asset Reconstruction Co. Pvt Ltd (IARC), HDB Financial Services Ltd ஆகிய நிறுவனத்தின் வாரியத்தில் இயக்குநராகவும். HDB Employees Welfare Trust-யின் அறங்காவலராகவும் உள்ளார்.