திரு. வினய் ராஜ்தான் அவர்கள் எச் டி எஃப் சி பேங்க் லிமிடெட்-யில் தலைமை மனித வள அதிகாரி (CHRO) ஆவார். இவர் செப்டம்பர் 2018 ஆம் ஆண்டு வங்கியில் சேர்ந்தார் மற்றும் வங்கியில் முழு மனித வள செயல்பாட்டிற்கும் பொறுப்பாவார்.
திரு. ராஜ்தான் அவர்கள் Idea Cellular Ltd நிறுவனத்தில் இருந்து விலகி வங்கியில் இணைந்தார். அங்கு இவர் தலைமை மனித வள அதிகாரி (CHRO) ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு Idea-வில் சேர்ந்தார் மற்றும் அங்கு பல மாற்ற முயற்சிகளுக்கு தலைமை தாங்கினார்.
30 ஆண்டுகால மனிதவள அனுபவமுள்ள திரு. ரஸ்தான் அவர்கள் FMCG, IT சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் வளமான, பரந்த மற்றும் மாறுபட்ட அனுபவத்தைக் கொண்டு வருகிறார். ITC Ltd, HCL Technologies மற்றும் Idea Cellular Ltd நிறுவனம் போன்ற முன்னணி நிறுவனங்களில் தலைமைப் பதவிகளை வகித்துள்ளார். திரு. ராஜ்தான் அவர்களின் தலைமையின் கீழ், இந்த நிறுவனங்களில் சில பணிபுரிய சிறந்த இடங்களாக அங்கீகரிக்கப்பட்டன.
திரு. ராஜ்தான் டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் மற்றும் XLRI, ஜாம்ஷெட்பூரில் இருந்து பணியாளர் மேலாண்மை மற்றும் தொழில்துறை உறவுகளில் முதுகலை தகுதியைப் பெற்றுள்ளார்.
திரு. ராஜ்தான் அவர்கள் ஜக்ரிதி என்பவரை திருமணம் செய்தார், இவர் பல்வேறு தொண்டு நிறுவனங்களில் ஈடுபட்டு வருகிறார். இவர்கள் தங்கள் குழந்தைகளான தனிஷா மற்றும் சிவ் ஆஷிஷ் மற்றும் அவர்களின் லாப்ராடோர் ஃப்ரெட்டியுடன் மும்பையில் வசிக்கின்றனர். இவர் ஒரு கால்பந்து ஆர்வலர், அதோடு கிரிக்கெட் மற்றும் டேபிள் டென்னிஸ் விளையாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். படிப்பு மற்றும் பயணம் என்பது இவரது பிற பொழுதுபோக்குகளாகும்.