குழுத் தலைவர், ரீடெய்ல் போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் மற்றும் மோசடி கட்டுப்பாடு, எச் டி எஃப் சி வங்கி

திரு. பிரஷாந்த் மெஹ்ரா

திரு. பிரஷாந்த் மெஹ்ரா எச் டி எஃப் சி வங்கியில் ரீடெய்ல் போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்ட் மற்றும் மோசடி கட்டுப்பாட்டு குழு தலைவர் ஆவார். இந்த பொறுப்பில், வங்கியின் சில்லறை கடன் தயாரிப்பு பிரிவுகளுக்கான போர்ட்ஃபோலியோ தரம், கடன் மேலாண்மை மற்றும் NPA கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்கு அவர் பொறுப்பாவார். (வாகன கடன்கள், அடமானமற்ற கடன்கள், அடமானங்கள், கார்டுகள், விவசாயம் மற்றும் மைக்ரோஃபைனான்ஸ்).

கூடுதலாக, திரு. மெஹ்ரா பல்வேறு சொத்து மற்றும் பொறுப்பு தயாரிப்புகளில் மோசடி மேலாண்மை கட்டமைப்பை மேற்பார்வை செய்கிறார் மற்றும் வங்கிக்கு சிறந்த முன்கணிப்பு மற்றும் தடுப்பு மோசடி கட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும் போதுமான கட்டுப்பாடுகளை உறுதி செய்கிறார்.

திரு. மெஹ்ரா அவர்கள் டிசம்பர் 1998 முதல் வங்கியில் பணியாற்றி வருகிறார், மேலும் ஒரு வலுவான கிரெடிட் கட்டமைப்பு நடைமுறையில் இருப்பதை உறுதி செய்வதற்காக கிரெடிட் செயல்பாட்டில் பல்வேறு பணிகளை நிர்வகித்து வருகிறார். சில்லறை கடன் வணிகத்தில் நுழைந்ததிலிருந்து இவர் வங்கியின் கிரெடிட் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

திரு. மெஹ்ரா அவர்கள் தனது வாழ்க்கையை Mahindra and Mahindra, ஆட்டோமோட்டிவ் பிரிவில் தொடங்கினார், பின்னர் 1998 இல் எச் டி எஃப் சி வங்கியில் சேருவதற்கு முன்பு GE Countrywide நிறுவனத்திற்கு மாறினார்.

இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் இருந்து ஒரு புரொடக்ஷன் இன்ஜினியர் (1993 பேட்ச்), எம்பிஏ (1996) ஆவார்.