திரு. பவேஷ் ஜாவேரி, ஐம்பத்தொன்பது (59) வயதுடையவர், 37 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார். அவர் வங்கியின் நிர்வாக இயக்குநராகவும், ATM, செயல்பாடுகள் மற்றும் நிர்வாக செயல்பாடுகளின் தலைவராகவும் உள்ளார். திரு. ஜாவேரி மும்பை பல்கலைக்கழகத்தில் வணிகத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார் மற்றும் இந்திய வங்கியாளர்களின் சான்றளிக்கப்பட்ட அசோசியேட் ஆவார்.
திரு. பவேஷ் ஜாவேரி செயல்பாடுகள், ரொக்க மேலாண்மை, ATM தயாரிப்பு மற்றும் வங்கியின் நிர்வாகத்தை மேற்பார்வை செய்கிறார். இவரது தற்போதைய பணியில், நாடு முழுவதும் வணிகம் மற்றும் செயல்பாடுகளுக்கு இவர் பொறுப்பாவார், மேலும் சொத்து, பொறுப்புகள் மற்றும் பரிவர்த்தனை சேவைகள், பேமெண்ட்கள் மற்றும் கேஷ் மேனேஜ்மென்ட், வர்த்தக நிதி மற்றும் கருவூலம், ATM தயாரிப்பு மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட வங்கியின் பன்முகப்படுத்தப்பட்ட தயாரிப்பு தொகுப்பில் கார்ப்பரேட், MSME மற்றும் ரீடெய்ல் வெர்டிகல்ஸ் விற்பனை பிரிவுகளுக்கு குறைபாடற்ற செயல்பாட்டு செயல்படுத்தல் திறனை உருவாக்கி வழங்குவதற்கும் பொறுப்பாவார். அவர் வங்கியில் செயல்பாடுகள், ரொக்க மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியமான செயல்பாடுகளுக்கு தலைமை தாங்கியுள்ளார்.
திரு. ஜவேரி அவர்கள் 1998 ஆம் ஆண்டு வங்கியில் செயல்பாட்டுப் பிரிவில் சேர்ந்தார். 2000 ஆம் ஆண்டில் மொத்த வங்கிச் செயல்பாடுகள் துறையின் வணிகத் தலைவராகப் பொறுப்பேற்றார், 2009 ஆம் ஆண்டில் குழுச் செயல்பாடுகள் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் 2015 ஆம் ஆண்டில் தரவு தொழில்நுட்பச் செயல்பாட்டின் கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். தரவு தொழில்நுட்பத் துறையின் குழுத் தலைவராக இவர் முன்னர் பணியாற்றியபோது, வங்கியின் பல்வேறு தயாரிப்பு சலுகைகளில் மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கும் செயல்பாட்டுத் திறனை உறுதி செய்வதற்காக தொழில்நுட்பத்தைத் தழுவி வங்கியின் டிஜிட்டல் மாற்றத்திற்கு இவர் பங்களித்துள்ளார். வங்கியில் சேர்வதற்கு முன்னர், திரு. ஜாவேரி ஓமன் இன்டர்நேஷனல் பேங்க் மற்றும் பார்க்லேஸ் பேங்கில் பணிபுரிந்தார்.
திரு. ஜாவேரி RBI-யின் உள்புற பேமெண்ட் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் மற்றும் 2004 ஆம் ஆண்டின் பேமெண்ட் குழுவின் ஒரு பகுதியாக இருந்தார், இது இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் (NPCI) உருவாக்க வழிவகுத்தது. பிரஸ்ஸல்ஸில் உள்ள SWIFT Scrl குளோபல் வாரியத்தில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்தியர் இவர்தான். Global Trade Review-வின் "ட்ரெசரி மற்றும் கேஷ் மேனேஜ்மென்ட்ல் யார் யார்" என்ற கட்டுரையில் இவர் இரண்டு முறை இடம்பெற்றுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்தால் உருவாக்கப்பட்ட பல்வேறு குழுக்களிலும் அவர் உறுப்பினராக இருந்துள்ளார்.
திரு. ஜாவேரி எச் டி எஃப் சி டிரஸ்டி கம்பெனி லிமிடெட், எச் டி எஃப் சி சேல்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எச் டி எஃப் சி செக்யூரிட்டீஸ் லிமிடெட் வாரியத்தின் இயக்குநராக உள்ளார்.
எச் டி எஃப் சி வங்கி தவிர, திரு. ஜாவேரி வேறு எந்த நிறுவனத்திலும் அல்லது அமைப்பு கார்ப்பரேட்டிலும் முழு நேர பதவியை வைத்திருக்கவில்லை.